நாம்பு மண்டலம் (Nervous System)


இது ஒரு தொலைபேசி அமைப்பைப் போன்றது. மூளை தலைமை நிலையம் போலவும், நரம்புகள் எல்லாம் தொலைபேசி மின்கம்பி போலவும் அமைந்து, உடலின் எல்லாப் பகுதிகளுக்கும் செய்திகளை எடுத்துச் செல்லுகிறது. எண்ணற்ற செய்திகளை அனுப்புவதாலும் பெறுவதாலும், உடலின் பல்வேறு திசுக்களும் உறுப்புகளும் ஒருமித்துச் செயல்படுகின்றன.

நரம்பு மண்டலம் இரு பகுதிகளைக் கொண்டது.

(1) மத்திய நரம்பு மண்டலம் (Central Nervous System CNS) 

இது மூளை, மண்டை நரம்புகள், தண்டுவடம், முதுகுத் தண்டு நரம்புகள் ஆகியவற்றால் ஆனது.

(அ) கட்டுப்படுத்தல்: 

இந்த மத்திய நரம்பு மண்டலம் தலை, நடுஉடல், கைகால்கள் ஆகியவற்றின் இயக்குதசைகளைக் கட்டுப்படுத்துகிறது.

(ஆ)செய்தி வாங்குதல்: 

இது தோல், கண்கள், காதுகள் போன்ற உணர்ச்சி உறுப்புகளிலிருந்து செய்திகளை வாங்குகிறது.

நரம்பு மண்டலம்

(2) தானியங்கு நாம்பு மண்டலம் (Autonomic Nervous System, A.N.S) 

இது பரிவு நரம்புகள் (Sympathetic Nervous), துணைப் பரிவு நரம்புகள் (Para Sympathetic Nervous) ஆகியவற்றால் ஆனது. தானியங்கு நரம்பு மண்டலம், இயங்கு (உடலின் உட்புறத்) தசைகளையும், சுரப்பிகளின் சுரப்புகளையும் கட்டுப்படுத்துகிறது.

நரம்புத் திசு (Nervous Tissue)


நரம்பு மண்டலங்களின் அமைப்புக்குக் காரணமானவை நரம்புத் திசுக்கள், நரம்பு செல்களினாலும், நரம்பு நார்களினாலும் உண்டாக்கப்பட்டுள்ள மெல்லிய தன்மையுடையவை. மூளையில் இருப்பதுபோல, இந்தச் செல்கள் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து, சாம்பல் நிறப்பொருள் (Grey Matter) எனப்படும். 
பொருளாக அமைந்துள்ளது. நரம்பு நார்கள் வெள்ளைப் பொருளாக அமைந்துள்ளது.

நரம்பு நார்கள் ஒவ்வொன்றும் தங்கள் நரம்பு செல்களுடன் இணைக்கப்பட்டு, நியூரான் (neurone) என்ற அலகாக அமைந்துள்ளது. செய்திகள், ஒரு நியூரானிலிருந்து அடுத்த நியூரானுக்கு அதன் நார்களின் வழியாகத் தாவித் தாவிச் செல்கின்றன. 
சில நியூரான்களின் நார்கள் மிகவும் நீளமானவை (எ.கா: கை, கால்களில் உள்ளவை) அவை பல தொகுதிகளாகச் சேர்த்து வெள்ளை நரம்புக்கட்டுகளாகத் தென்படுகின்றன.

நரம்புகள் மூன்று வகைப்படும்.

(1) உணார்ச்சி நரம்புகள்:

இவை உடலின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் மூளைக்கும் தண்டு வடத்திற்கும் செய்திகளை எடுத்துச் செல்கின்றன. அவை, உடல் தனது பாதுகாப்புக செய்ய வேண்டிய எதிர்வினைகளைச் செய்ய (React) உடலுக்கு உதவுகிறது,

(2) கட்டளைநரம்புகள் (Motor): 

இவை மூளை தண்டுவடங்களிலிருந்து செய்திகளை உடலின் எல்லாப் பாகத்திலும் இருக்கும் தசைகள், சுரப்பிகளுக்கு எடுத்துச் செல்லுகின்றன. செயல்கள் செய்ய இவை தூண்டுகின்றன.

(3) கலப்பு நரம்புகள் (Mixed Nervous): 

இவை உணர்ச்சி நரம்பு நார்களும், கட்டளை நார்களும் கொண்டவை. அதனால், இவை இரண்டு திசைகளிலும் செய்திகளை எ செல்லுகின்றன.

மூளை (Brain)

இது, மத்திய நரம்பு மண்டலத்தின் (C.N.S) மிக முக்கியமான பகுதி. இது மண்டை ஓடாகிய குழியில் பத்திரமாகப் பாதுகாக்கப்படுகிறது.

அதன் பகுதிகளாவன:

(1) பெருமூளைஅல்லது மூளையின் முன் பகுதி.

(2) சிறுமூளைஅல்லது மூளையின் பின் பகுதி (Cerebellam)

(3) நடு மூளை (Mid brain).

(4) மூளைத்தண்டு இது பான்ஸ் (Pons), முகுளம் (Medulla) ஆகியவை அடங்கியது.

பெருமூளை, மூளையின் மிகப்பெரும் பகுதியாகும். மண்டை ஓட்டின் முன் பகுதியையும், மேல் பகுதியையும் அடைத்துக் கொண்டுள்ளது. அது, வலது பகுதி, இடது பகுதி என இரு பகுதிகளாக உள்ளது. இவ்விரு பகுதிகளில், ஒவ்வொன்றும் உடலில் தங்கள் எதிர் எதிர்ப் பக்கங்களைக் கட்டுப்படுத்துகின்றன. இதனால், வலப்பக்கத்துப் பெருமூளைக்கு நோய் அல்லது காயம் ஏற்பட்டால் உடலின் இடப்புற உறுப்புக்கள் செயலற்றுப் போகின்றன. இடப்பக்கப் பெரு மூளைக்கு நோய் அல்லது காயம் ஏற்பட்டால் வலப்புற உறுப்புக்கள் செயலற்றுப் போகின்றன.
மூளை அமைப்பு

பெருமூளையின் பணிகள் (Cerebrum)

பெருமூளையின் ஒவ்வொரு பக்கத்திலும் நான்கு பகுதிகள் உள்ளன. மண்டை எலும்புகளுக்குள்ள அதே பெயர்களோடு அவை உள்ளன. 

அவற்றின் பணிகள் கீழ்வருமாறு:

(1) முன்புறப் பகுதி (Frontal lobe)

(1) கட்டளை மையம், இவை இயக்கு தசைகளைக் கட்டுப்படுத்துவன.

(2) பேச்சுமையம்

(3) அறிவுஆற்றல் நினைவு சக்தி, அறிவுக் கூர்மை, மன உறுதி போன்றவற்றிற்கு உதவுகின்றன.

(2) உச்சிப்புறப் பகுதி (Parietal lobe)

உணர்ச்சி மையங்கள்! தொடு உணர்ச்சி, வலி, வெப்பம், குளிர், அழுத்தம் போன்றஉணர்ச்சிகளுக்கு.

(3) நெற்றிப்பொட்டுப் பகுதி (Temporal lobe)

கேட்டல்.

(4) தலை ஓட்டின் பின்புறப்பகுதி (Occipital lobe): 

பார்த்தல்

சிறுமூளை, பெருமூளையின் அடிப்புறத்தில், பின்புறமாக அமைந்துள்ளது. இது பெருமூளையைவிடச் சிறியது. இதுவும் இடப்பகுதி, வலப்பகுதி என்ற பிரிவுகள் உடையது. அதன் செயல்கள் நமது சுயநினைவுடனும் நம் விருப்பத்தின்படியும் நடப்பவை அல்ல.

சிறுமூளையின் பணிகள் (Cerebellum)

(1) உடலின் சமநிலைக்கு உதவுதல்.

(2) தசைகள் நல்ல திறனுடன் இருக்க உதவுதல்

(3) தசைகளின் பணிகளை ஒருங்கிணைப்பது.

சிறுமூளை நோயுற்றால், தசைகளில் பலவீனம், உருக்குலைந்த தன்மை, நடக்கும்போது தடுமாறுவது, விழுவது (குடிகாரனைப் போல) ஆகியவை ஏற்படும்.

நடுமூளை (Mid Brain)

இது இரண்டு சிறிய நரம்புத் திசு நார்கள் கொண்டது. இவை பெருமூளையின் அடிப்புறத்தில் அதன் வல, இடப் பகுதிகளுடன் நடுவில் கட்டப்பட்டிருக்கும். 

பணிகள்:

(1) பெருமூளையிலிருந்து செய்திகள் வரவும் போகவும் பாதையாக இது பணிபுரிகிறது. (2) பார்ப்பதற்கும் கேட்பதற்கும் உரிய அனிச்சைச் செயல் மையங்களைக் கொண்டுள்ளது.

(3) உடல் வெப்பம், மன உணர்ச்சிகள், பால் உணர்ச்சி தூண்டப்படுதல் ஆகியவற்றுக்கான மையங்களைக் கொண்டுள்ளது.

மூளைக் காம்பு என்பது, காம்பு போன்றது. இது மூளையைத் தண்டுவடத்துடன் இணைக்கிறது. அதன் பாகங்களாவன:

(1) பான்ஸ் (Pons): 

நடுமூளைக்குக் கீழே உள்ள இந்தப் பகுதி, சிறுமூளையின் இரு பக்கங்கள், நடுமூளை ஆகியவைகளை முகுளத்துடன் இணைப்பது. அதனால் இது ஒரு பாலம் போன்றது. (2) முகுளம்: மேலே இருக்கும் பான்ஸ்களையும், கீழே உள்ள தண்டுவடத்தையும் சேர்த்து வைக்கிறது இது. தண்டுவடத்தைப்போலவே இது தோன்றினாலும், சிறிது பருமனானது. மண்டை ஓட்டுக்கு உள்ளேயே இது உள்ளது.

மனித மூளையின் உள்ளமைப்பு


(1) முன்புறப் பகுதி (Frontallobe)

முகுளத்தின் முக்கிய பணிகள் பின் வருமாறு

தண்டுவடம்


(அ) மூளையையும், தண்டுவடத்தையும் இணைத்துச் செய்திகளை அனுப்புகிறது. மூளை நரம்புநார்கள் இதில்தான் எதிர்பக்கத்துக்குத் தாண்டிச் செல்கின்றன.

(ஆ)இரத்த ஓட்டம், மூச்சுவிடுதல் ஆகிய, முக்கிய பணிகளைக் கட்டுப்படுத்தும் நரம்பு மையங்களை உள்ளடக்கியது இது.

விழுங்குதல், வாந்தி எடுத்தல், இருமுதல் ஆகிய அனிச்சைச் செயல் மையங்களைக் கொண்டுள்ளது.

மண்டைநரம்புகள் (Cranial Nervous)


மூளையிலிருந்தும், மூளைக் காம்பிலிருந்தும் வெளிவரும் பன்னிரெண்டு ஜோடி நரம்புகள் மண்டை நரம்புகளாகும். இவை, மண்டை ஓட்டிலுள்ள துளைகள் வழியாகக் கண்கள், காதுகள், முகம், நாக்கு, தொண்டை முதலியவற்றிற்குச் செல்லுகின்றன. வேகஸ் (829) எனப்படும் பத்தாவது ஜோடி மண்டை நரம்பு, கிளைகளாகப் பிரிந்து, குரல்வளை, நுரையீரல், இதயம், செரிப்பு உறுப்புகளுக்குச் செல்லுகின்றன. தன்னியக்க நரம்பு மண்டலத்தின் ஒரு பாகமாகவே வேகஸ் நரம்புகள் செயல்படுகின்றன.

தண்டுவடமும், (Spinal Cord and Spinal Nervous)

தண்டுவடம் என்பது நரம்புத் திசுக்களால் ஆன கயிறு போன்றது. சுண்டுவிரல் பருமனும் சுமார் 42 செ.மீ. நீளமும் உடையது. இது முதுகெலும்புக் கோவையால் உண்டாக்கப்படும் கால்வாய் போன்ற அமைப்பில் அமைந்துள்ளது. கழுத்தின் பின் பகுதி மண்டை ஓட்டுடன் சேரும் இடத்தில், தண்டுவடம், முகுளத்துடன் இணைக்கப்பட்டு இருக்கும். கீழே, இது இடுப்பு முள்ளெலும்பின் முதல் எலும்பு வரை நீண்டு இருக்கும். இது, குதிரை வால் போல, நரம்புகள் கற்றையாக இதன் முடிவில் காணப்படும்.


தண்டுவட நரம்புகள்:


முப்பத்தொரு ஜோடி தண்டுவட நரம்புகள், தண்டுவடத்தின் பக்கவாட்டிலிருந்து கிளம்புகின்றன. முதுகு முள்ளெலும்புகளுக்கு இடையில் புகுந்து, இவை உடல், கை, கால்களுக்குச் செல்லுகின்றன. இவை அனைத்தும் உணர்ச்சி நரம்புகளும் கட்டளை நரம்புகளும் ஆகிய கலப்பு நரம்புகள்.

தண்டுவடத்தின் உட்பகுதி தொலைபேசித் தொடர்பகம் போன்ற அமைப்பை உடையது. இங்கு உணர்ச்சி நரம்புகள் செய்திகளை வாங்கி, உடனே கட்டளை நரம்புகளின் வழியாக, அந்தத் தசைகளுக்கு இணைப்புத் தரப்படுகிறது. மூளையின் மையத் தொலைபேசி நிலையத்துக்கும் அந்தச் செய்தி அறிவிக்கப்படுகிறது.

தண்டுவடத்தின் பணிகள்:


(1) கட்டளைத் தூண்டுதல்களைப் பெருமூளையின் முன்புறப் பகுதியிலிருந்து பெற்றுத் தண்டுவட நரம்புகள் வழியாகத் தசைகளுக்கு அனுப்புதல்.

(2) தோல் மற்றும் வேறு திசுக்களிலிருந்து உணர்ச்சிகளைப் பெற்று, அந்தச் செய்திகளை மூளைக்கு அனுப்புதல்.

(3) அனிச்சைச் செயல் தண்டுவடத்திலேயே நடந்துவிடும் விரைவான நிகழ்ச்சி இது. உதாரணமாக, வெப்பமாக இருக்கும் ஒன்றை நீ தொட்டால், தண்டுவடத்தின் மூலம் பெறும் இந்தச் செய்தி, உடனே கையின் தசைகளுக்கு மின்னல் வேகத்தில் அனுப்பப்படுகிறது. அந்தச் செய்தி மூளையை அடைவதற்கு முன்பே, உன்கையை நீ அந்த வெப்பமான பொருளிலிருந்து எடுத்துவிட்டிருப்பாய்.

மூளை உறைகளும், மூளை-தண்டுவடத் திரவமும் (Meninges and Cerebro Spinal Fluid (CSF)

மூளையும், தண்டுவடமும் மூன்று உறைகளால் மூடப்பட்டுள்ளன. அவைகளுக்கு மூளை உறைகள் (Meaninges) என்று பெயர்.

(1) டியூரா மேட்டர் (Dura Mater) : இது வெளிப்புறமாக உள்ள பருமனானதும், சுருங்கி விரியும் தன்மையுடையதும் ஆகும். இது மண்டை ஒடு, முதுகு முள்ளெலும்பின் உட்புறக் கால்வாய் போன்ற பகுதி ஆகியவற்றிற்கு மெத்தென்ற தன்மை தரும் உரை,

(2) அரக்னாய்டு மேட்டர் (Arachonoid Mater): இது மெல்லிய நடுப்புறப்படலம். இது தளர்த்தியான ஓர் உறை, இதற்கு அடியில் தீக்கா (theca) என்ற இடைவெளி உள்ளது. இதில் மூளை, தண்டுவடத் திரவம் இருக்கும்.

(3) பையாமேட்டர் (Pia Mater): இது நரம்புத் திசுக்களுக்கு மிக அருகில் இருப்பது. இரத்தக் குழாய்கள் இதில் அடங்கியுள்ளன.

மூளை-தண்டுவடத் திரவம் (Cerebrospinal fluid):

இது ஒரு தெளிவான திரவம். மூளை, தண்டுவடம் ஆகியவற்றிற்கு உட்புறமும் வெளிப்புறமும் இது சுழன்று ஓடிக்கொண்டுள்ளது. நரம்பு மண்டல நோய்த் தன்மைபற்றி அறிந்திட, இடுப்பு முள்லெலும்பும்புப் பகுதியிலிருந்து லம்பார் பங்க்சர் முறையில் ஊசியினால் இந்தத் திரவம் சிறிதளவு எடுத்து ஆராயப்படும்.


மூளைதண்டுவடத் திரவத்தின் பணிகள்

(1) தண்ணீர் மெத்தை போல இது இருந்து, மூளையும் தண்டுவடமும் அதிர்ச்சி, குலுங்கல் ஆகியவற்றால் பாதிக்கப்படாமல் பாதுகாக்கிறது.

(2) கழிவுப் பொருள்களையும் நச்சுப் பொருள்களையும் அடித்துக் கொண்டுபோய், அதன் து ஊட்டம் தருதலும், சுத்தமாக்குதலும் தானியங்கு நரம்பு மண்டலம் காரணமாக

தானியங்கு நரம்பு மண்டலம் (Autonomi nervous system)

இரண்டாவது நரம்பு மண்டலமான ‘இது, இயங்கு தசைகள், சுரப்பிகளின் சுரப்புகள் ஆகியவற்றின் நடைமுறைகளைக் கட்டுப்படுத்துவதாகும். இந்த நரம்புகள் நமது கட்டுப்பாட்டில் இல்லை. எனினும், மைய நரம்பு மண்டலத்துடன் இது நெருங்கிய சம்பந்தம் உடையது.

இந்தத் தானியங்கு நரம்பு மண்டலத்தில் இரண்டு தொகுதி நரம்புகள் உள்ளன. செயல்படுவதில் அவை ஒன்றுக்கொன்று எதிர் எதிர் ஆனவை.

(1) பரிவு மண்டலம் (sympathetic System):


இது நரம்பு செல்களின் கூட்டங்களால் (ganglia) ஆன இரண்டு சங்கிலிகளால் ஆனது. முதுகெலும்புக் கோவையின் பக்கத்துக்கு ஒன்றாக இவை உள்ளன. இவை நரம்பு நார்களால், முதுகுத் தண்டு நரம்புகளுடன் இணைக்கப்பட்டுள்ளன.

இந்தப் பரிவு நரம்புகள் அச்சம், வியப்பு, சினம் போன்ற உணர்ச்சிகளால் தூண்டப்படுகின்றன.

பரிவு நாம்பு தூண்டல்களின் பலன்கள்,


கண்ணின் பாவைகள் அகலம் ஆகிவிடுதல்,

இதயத்துடிப்பு வேகம் அதிகரித்தல்.

மூச்சு விடுதலானது அதிக வேகமும் ஆழமும் ஆகுதல்

இரத்தஅழுத்தம் உயர்தல்,

செரிப்பு தாமதப்படுதல்.

வியர்வை அதிகரித்தல்.

ஆசன, சிறுநீர்க்குழாய்களை இயக்கும் தசைகள் (இறுக்கம் ஆதல்).

(2) துணைப்பரிவுமண்டலம் (Parasympathetic System)


சாதாரண, அமைதியான வாழ்க்கையில் இந்த மண்டலம் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. மூளை நரம்புகள் சிலவற்றால் (குறிப்பாக வேகஸ் நரம்புகள்) 

கீழ்க்கண்ட செயல்களை நிகழ்த்துகின்றன. 


கண்ணின் பாவைகள் சுருங்குதல்.

உமிழ்நீர் ஒழுகுதல்.

செரிப்பு, உணவு சாரம் செல்லும் தசைச்சுருக்கம் ஆகியவற்றைத் தூண்டுதல்.

இதயத்துடிப்பு, மூச்சுவிடுதல் ஆகியவற்றின் வேகம் குறைதல்,

இந்த மண்டலத்தில் உள்ள அடி இடுப்பு மூட்டெலும்பு நரம்பு, சிறுநீர், மலம் கழிக்க உதவுகிறது.

மனித இயல்பியல், தானியங்கு நரம்பு மண்டலத்தின் விளைவு:


துணைப் பரிவு மண்டலம் வலிமையுடையதாகச் சிலரில் இருக்கும். அவர்கள், நல்லமைதியும் நிறைவானதன்மையும் உடையவர்களாய் இருப்பார்கள். பரிவு மண்டலம் வலிமையுடையதாய்ச் சிலரில் இருக்கும். அவர்கள் உணர்ச்சிவசப்படுவார்கள்: விரைவில் நிலைகுலைந்து விடுவார்கள்.

இரண்டு மண்டலங்களும் சம வலிமையுடன் சிலரில் இருக்கும். அவர்கள் உணர்ச்சிவசப்படாமல் விழிப்புடன் இருப்பார்கள்.

நரம்பு மண்டலச் சுகாதாரம்


ஒருவர் சுறுசுறுப்பாகப் பணியாற்றிய பிறகு களைத்துப் போவது இயல்பு. இந்தக் களைப்பு உணர்வு சோர்வு எனப்படும். உடலின் சாதாரணமான சுழற்சி; வேலை செய்தல், சோர்வு அடைதல், ஓய்வு, மீண்டும் வேலை செய்தல் என்பது ஆகும். தூக்கமும் தேவை. போதிய ஓய்வு, இளைப்பாறுதல், தூக்கம் ஆகியவை இல்லாமல் தொடர்ந்து வேலை செய்வது

கீழ்க்கண்ட ஏதாவது ஒரு தீங்கு அல்லது எல்லாத் தீங்குகளுக்கும் காரணமாடிவிடும்.


(1) ஓய்வெடுத்தாலும் குறையாத சோர்வு.

(2) தலைவலி,

(3) மன உளைச்சல் இது முகத்திலும், குரலிலும், நடத்தையிலும் தெரியும்.

(4) நோய்த்தொற்றுதலுக்கு எதிர்ப்புச்சக்திக் குறைவுபடல். (எ.டு) சாதாரணச்சளிபிடித்தல்.

ஓய்வும் இளைப்பாறுதலும்

ஓய்வு எடுக்கும்போது, நாம் முன்பு வேலை செய்ததால், உடல் பழுதடைந்த தேய்ந்துபோனவற்றை மீண்டும் பெற நேரம் எடுக்கிறது. ஓய்வின்போது, உடல் தளர்ந்துள்ள நிலையிலும் மனம் அமைதியாகவும் இருக்க வேண்டும். உடலை நீட்டிப் படுத்துச் சிறிய. தலையணையை தலைக்கு வைத்துக்கொண்டால் போதும். சிறிது நேரம், மூச்சை உள் இழுத்து வெளிவிடுவது மெதுவாக இருக்க வேண்டும். பிறகு உடல் தசைகளை நீட்டி, அவை விறைப்பாக இல்லாமல் தளர்ச்சி ஆகும்படி செய்து படுக்கையில் முழுவதும் படிந்து இருக்க வேண்டும்.
படுத்து ஓய்வெடுப்பதும் இளைப்பாறுதலும் ஏறத்தாழத் தூக்கத்தைப்போலவே நலம் தருவதாகும். வெப்பமான காலங்களில் எல்லாரும் நடுப்பகலில் ஓய்வெடுத்துக்கொள்வது நல்லது.

தூக்கம்


உடலுக்கும் மனதுக்கும் முழு ஓய்வாக அமைவது தூக்கம் ஒன்றுதான். தூக்கத்தில் தான் ஒருவர் முழுமையான அல்லது ஓரளவு நினைவற்ற நிலையை அடைந்தார் என்னும் அளவுக்கு அவரது நரம்பு மண்டலத்தின் வேலைகள் பெரிய அளவுக்கு குறைந்திருக்கும். தசைகள் தளர்வுற்று, முழு உடலும் முழு ஓய்வில் இருக்கும்.

நல்ல உடல் நலத்துக்கு ஆழ்ந்த தூக்கம் அவசியம். கிளர்ச்சி அடைந்த மனத்துடன் இருப்பதும், நேரங்கழித்துப் படுக்கைக்குப் போவதும் தவிர்க்கப்படவேண்டும். சுத்தமான காற்றும் அமைதியும் தேவை. தூக்கம் கலைக்கப்படாததாக இருக்க வேண்டும். தேவைப்பட்டால் கொசுவலையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

தேவையான தூக்கத்தின் அளவு, வயது, செய்யும் தொழில், பழக்க வழக்கம் ஆகியவற்றைப் பொறுத்து ஆளுக்கு ஆள் வேறுபடும். மூளை வேலை செய்பவர்களுக்கு, உடல் உழைப்பு உள்ளவர்களைவிட அதிகத் தூக்கம் தேவை. வெப்ப மண்டலத்தில் உள்ள வயது வந்தவர்களுக்கு இரவில் எட்டு மணி நேரத் தூக்கம் தேவை. இது முடியாது எனில், அந்த நேரத்தைச் சரிகட்டப் பகலில் ஒய்வெடுத்துக்கொள்ளலாம். 
தூக்கமின்மை (insomnia) ஒரு பிரச்சினையாக உள்ளவர்கள் படுக்கும் முன்பு வெதுவெதுப்பான நீரில் குளித்துவிட்டு ஒரு குவளை வெதுவெதுப்பான பால் குடிக்கலாம்.