தோல் மற்றும் தோல் பாதுகாப்பும்
தோல்(SKIN)
- முழு உடலையும் பாதுகாக்கின்ற மேல் உறையாக உள்ளது தோல் ஆகும்.
(1) மேல் அடுக்கு (Epidermis):
- மேல் புறமாக இருக்கும் செல்கள் செதில்கள் போன்று தட்டையானவை.
- நாள் செல்லச் செல்ல இவை தேய்ந்துபோய் நீக்கப்படுகின்றன. அவைகளுக்குப் பதிலாகக் கீழே இருந்து புதியவை வருகின்றன.
- மேல் அடுக்கில் நரம்புகளோ, இரத்தக் குழாய்களோ இல்லை. அதனால், இதில் மட்டும் காயம் பட்டால் வலியும் தெரியாது. இரத்தமும் வராது.
புறத்தோல் (Epidermis):
- புறத்தோல் என்பது நம் உடலின் மேல் பாகத்தில் காணப்படும் அடுக்கு ஆகும்.
- இந்த அடுக்கில் இரத்தக் குழாய்கள் காணப்படுவது இல்லை.
- இங்குள்ள செல்கள் நிணநீரின் மூலம் சத்துக்களைப் பெறுகின்றன.
- நரம்புகள் இந்த அடுக்கில் காணப்படுகின்றன.
- புறத்தோல் நான்கு வகையான அடுக்குகளால் ஆனது
அவைகள் -
1. கார்னியா அடுக்கு (Stratum Corneum)
(2). லூசிடம் அடுக்கு (Stratum Lucidum)
(3). நிறமி அடுக்கு (Stratum Granulosum)
(4). மல்பீஜியுன் அடுக்கு (Stratum Malphigian).
(1). கார்னியம் அடுக்கு (Stratum Corneum) :
- இந்த அடுக்கு, உடலின் சில பகுதிகளில் குறிப்பாக உள்ளங்கை, உள்ளங்கால் ஆகிய பகுதிகளில் தடித்துக் காணப்படுகின்றன.
- உதடுகளில் இந்த அடுக்கு மென்மையாகக் காணப்படுகிறது. தளும்புகள், கொம்புகள், நகங்கள், சிறகுகள், மீனின் செதில்கள் ஆகியவையனைத்தும் இந்த அடுக்கிலிருந்துதான் தோன்றுகின்றன.
(2). லுசிடம் அடுக்கு (Stratum Lucidum) :
- இந்த அடுக்கு, ஸ்ட்ரேட்டம் கார்னியத்தையடுத்து அமைந்துள்ளது.
- இது ஒளி ஊடுதலும் தன்மையுள்ளது. இங்குள்ள செல்களுக்குத் தெளிவானத் தோற்றம் இல்லை.
(3). நிறமி அடுக்கு (Stratum Granulosum) :
- இது மேல் தோலின் மூன்றாவது அடுக்காக அமைந்துள்ளது.
- தட்டையான செல்களால் ஆனது செல்கள் தோலுக்கு நிறத்தையளிக்கும் நிறமி அணுக்களைக் கொண்டுள்ளது.
(4). மல்பீஜியன் அடுக்கு (Stratum Malphigian) :
- இவ்வடுக்கு புறத்தோலின் அடுக்குகளில் மிகவும் பெரிய பாகமாகும்.
- இவ்வடுக்கில் உள்ள செல்களில் செல்பிரிதல் நடைபெறும்.
- இவ்வடுக்குப் பாலி ஹைட்ரா செல் (Poly Hydra Cell)களால் ஆனது. இதன் இடையில் உள்ள செல்களுக்குப் ப்ரிக்கள் செல்கள் (Prickle Cell)என்று பெயர்.
- இவ்வடுக்குகள் இறுதியில் மெலானின் என்று நிறமித் துணுக்குகள் (Melanin)காணப்படுகின்றன.
- இந்த நிறமித் துணுக்குகளின் எண்ணிக்கையைப் பொருத்துத் தோலின் நிறம் அமைகிறது.
1.முடிகள்
- நுண்ணுயிரிகளையும் முடிகள் தடுத்து நிறுத்துகின்றன.
- அதனால் அறுவை சிகிச்கை போது முடியைச் சவரம் செய்து நீக்குவது அவசியம்.
2 நகங்கள் :
- இவை உள் தோலின் கடினமான செல்களினால் அமைந்தவை.
- விரல்களின் நுனிகளைக் காக்கின்றன. நகத்தைச் சுற்றியுள்ள தோலில் வெட்டு ஏற்படுவதைத் தடுக்க வேண்டும். இல்லையென்றால் அது நோய்த் தொற்றுதலை அடைந்து
- நஞ்சு ஏறிய விரல்” என்ற நோய்குக் கரணமாகிவிடும்.
தோலின் வேலைகள் :
- தோல் உடம்பின் மிகப்பெரிய உறுப்பாகும்.
- இது உடலின் மேலுறையாக மட்டும் அமையாமல் பல்வேறு செயல்களை செய்யக்கூடிய உறுப்பாகச் செயல்படுகிறது.
- .பாதுகாப்பு தோல் உள்ளுறுப்புகளைக் காயம் ஏற்படாமல் பாதுகாக்கிறது.
- * நோய் விளைவிக்கும் நுண்ணுயிரிகள் உடலினுள் செல்லாதவாறுத் தடுக்கிறது.
- நகம், குளம்பு, கொம்புகள் ஆகியவை நமது உடலைப் பாதுகாக்கும் ஒட்டுறுப்புகள் ஆகும். வியர்வையை வெளியேற்றும் கழிவு உறுப்பாகச் செயல்படுகிறது.
- உணர்ச்சி உறுப்புகள் உணர்வலைகளை எடுத்துச் சென்று அவைகளை நமக்கு உணர்த்துகிறது.
- உயிர்சத்து D தயாரிக்கத் தோலில் 70 எர்கோஸ்டிரால் என்ற வேதிப்பொருள் காணப்படுகிறது.
- இப்பொருள் சூரிய ஒளியில் உள்ள புற ஊதாக் கதிர்களைக் கிரகித்து உயிர்சத்து D ஆக மாற்றுகிறது.
- . உடலின் வெப்பநிலையைப் பாதுகாத்தல்.
- பொதுவாக வெப்பமானது வெப்பக்கடத்தல், வெப்பச் சலனம், வெப்பக் கதிர்வீசல்
- முறையில் கடத்தப்படுகிறது. ஆனால் தோலில் அமைந்துள்ள எண்ணெய்,
- கொழுப்புப் பொருட்கள் வெப்பத்தைக் கடத்தாமல் பாதுகாக்கிறது.

1 கருத்துகள்
GOOD
பதிலளிநீக்கு